Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் ஏற்பாட்டிலான உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் நிகழ்வு, கல்லூரியின் பொன் பாபதி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (09) கல்லூரி அதிபர் கி.விக்கினராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட ஆணையாளர் திருமதி அமல்ராஜ் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.
சுற்றாடல் கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்ததுடன், சுற்றாடல் கீதத்தையும் இசைத்து உறுதி மொழியினையும் சுற்றாடல் முன்னோடிக்கழக மாணவர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டார். தொடர்ந்து கல்லூரி முன்றலில் பழ மரக்கன்றொன்றை பிரதம விருந்தினர் நாட்டிவைக்க, கல்லூரி மாணவர்களும் அதிகளவில் மரக்கன்றுகளை கல்லூரி வளாகத்தில் நாட்டினர். புதிய சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கான சின்னஞ்சூட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
மாணவர்களது சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago