2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மகனைத் அடித்த தாய் கைது

Gavitha   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.இளவாலை பனிப்புலம் பகுதியில் தனது 13 வயது மகனை அடித்துக் கண்டித்த குற்றச்சாட்டில் தாய் ஒருவர் புதன்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

மகன் படிப்பில் அக்கறை காட்டாமல் இருந்ததைக் கண்டித்து தாய் மகனை அடித்துள்ளார். இதனால் வீட்டை விட்டுச்சென்ற மகன், உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு காலையில் எழுந்து முதல்நாள் இருந்தபடியே பாடசாலைக்குச் சென்றுள்ளான்.

அழுக்கடைந்த உடையுடன் வந்த மாணவனைப் பார்த்த ஆசிரியர், அவனிடம் வினாவியபோது தாயார் அடித்தமையும் அதன்பின்னர் தான் வீட்டுக்குச் செல்லவில்லையென்பதையும் கூறியுள்ளான். இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினர் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

குறித்த சிறுவனை பாடசாலையிலிருந்து அழைத்துச்சென்ற சிறுவர் நன்னடத்தை அதிகாரி, இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பொலிஸார் தாயார் மீது வழக்குப் பதிவு செய்து தாயாரைக் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .