Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூன் 10 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்றச்செயல்களை பொலிஸார் ஒரு மாதத்துக்குள் ஒழிக்க வேண்டும் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன், புதன்கிழமை (10) உத்தரவிட்டுள்ளார்.
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் நீதிமன்ற கட்;டடத் தொகுதியில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,
அத்துமீறிய வாள்வெட்டுக்களை கட்டுப்படுத்தல், கோஷ்டி சண்டைகள், வீதிகளில் ரவுடித்தனம் செய்பவர்கள், வீதியில் செல்லும் பெண் பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்பவர்கள் ஆகியோரைக் கட்டுப்படுத்துவதுடன் மாணவிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.
யாழ்;ப்பாணத்தில் 6 மணிக்கு பின்னர் இடம்பெறும் தனியார் கல்வி நிறுவன செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
மதுபானசாலை உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். பான்பராக், மதனமோதகம் உள்ளடங்கலான போதைப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களைக் கண்காணிக்க வேண்டும்.
சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கூட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சட்டவிரோத கூட்டங்களை கூட்டுபவர்களுக்கு எதிராக, தண்டனை சட்டக்கோவை ஆகியவற்றை அமுல்ப்படுத்தி அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
பாடசாலைகளில் பொலிஸாரை நிறுத்தி பாடசாலைச் சுற்றாடலைக் கண்காணித்தல். முக்கியமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தி குற்றச் செயல்களை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க நீதிபதி, பொலிஸாருக்கு வலியுறுத்தினார்.
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
36 minute ago
41 minute ago