2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆரம்பபிரிவு மாணவர்களுக்கான திருமுறை மனனப் போட்டி

George   / 2015 ஜூன் 11 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா

வண்ணை சாந்தையர்மடம் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் சைவசமய அபிவிருத்திக்கழகம், மாணிக்கவாசகர் சுவாமிகள் குருபூசை தினத்தை முன்னிட்டு ஆரம்பப்பிரிவு மாணவர்களிடையே சமய அறிவை வளர்க்கும் முகமாக திருமுறை மனனப் போட்டியை எதிர்வரும் 16ஆம் திகதி வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் நடத்தவுள்ளது.

இப்போட்டியானது தரம் 1, 2 பாலர் பிரிவு மற்றும் கீழ் பிரிவான தரம் 3, 4க்கும் நடைபெறவுள்ளது.

பாலர் பிரிவுக்கு 'முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை' மற்றும் 'பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்' என்னும் இரு திருமுறைகளும் கீழ் பிரிவுக்கு 'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய' மற்றும் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்' ஆகிய இரு திருமுறைகளிலும் மனனப் போட்டிகள் நடைபெறவுள்ளளன. 

போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளோர் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .