2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எரிபொருள் தாங்கியின் மீது பிள்ளைகளை இருத்தினால் சட்ட நடவடிக்கை

George   / 2015 ஜூன் 12 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கியின் மீது பிள்ளைகளை அமரச்செய்து பயணிப்பவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உபபரிசோதகர் ஏ.கே.ஜெயவன்சா, வெள்ளிக்கிழமை (12) தெரிவித்தார். 

எதிர்காலத்தில் வாகன சாரதிகள் தொடர்பில் போக்குவரத்துப் பொலிஸார் இறுக்கமான நடவடிக்கைளை மேற்கொள்வார்கள். வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். 

தேவையற்ற ரீதியில் வாகன விபத்துக்களால் உயிரிழப்புக்கள் அநியாயமாக ஏற்படுகின்றன. இதனை தடுக்கவேண்டிய கட்டாயம் பொலிஸாருக்கு உண்டு. மீறுபவர்கள் மீது பாரபட்சம் பாராமல் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .