2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் காயம்

Kogilavani   / 2015 ஜூன் 26 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு விசுவமடு ஏ-35 வீதியில்  வெள்ளிக்கிழமை (26) காலை துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை இராணுவ ஜீப் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு விசுவமடுவைச் சேர்ந்த செல்லையா பரராஜசேகரம் (வயது 70) என்பவரே படுகாயமடைந்தார்.

புதுக்குடியிருப்பிலிருந்து விசுவமடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் 12ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் அதே திசையில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை மோதியுள்ளதுடன் வேகக்கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டுள்ளது.

இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .