2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மாணவிகளை புகைப்படம் எடுத்தவர்கள் கைது

Menaka Mookandi   / 2015 ஜூன் 26 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கந்தரோடை பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் நின்று பாடசாலை மாணவிகளை கைபேசியில் புகைப்படம் எடுத்த இருவரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (26) தெரிவித்தனர்.

கைதான இருவரும் அளவெட்டி தெற்கு பகுதியினை 21, மற்றும் 23 வதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சந்தேக நபர்களை சிவில் உடையில் சென்ற பொலிஸார் கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர்களை இன்றையதினம்(26) மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .