Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 21 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்;கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பிரதேசத்தில் தினமும் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருகின்;றது. குறிப்பாக ஊரியான் குளத்தின் கீழான பயிர்ச்செய்கை நிலங்களில் குறித்த மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும், இரவு வேளைகளில் கனரக வாகனங்களில் மணல் ஏற்றிச்செல்லப்படுவதுடன்; இதனைத்தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக கடற்கரையோரங்களில் உள்ள உவர்நீர் கலந்;த மண்ணினையும் ஏற்றிச் சென்று வேறு இடங்களில் கட்டடங்கள் அமைப்பதற்கு பயன்படுத்துகின்றனர். இதனைக்கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோர் கைது செய்து தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விசேட நடவடிக்கை மூலம் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்;துள்ளனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago