Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூலை 23 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து, தலையில் காயங்களுடன் மயங்கிய கிடந்த ஆண் ஒருவரை மீட்டு, ஊறணி பிரதேச வைத்தியசாலையில் வியாழக்கிழமை (23) அனுமதித்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தலையில் இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய செல்லக்குட்டி என பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு 12 மணியளவில் வீதி ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிஸார், பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து வீதிக்கு இரத்தம் வழிந்தோடுவதை கண்டுள்ளனர். வாகனத்தில் இருந்து இறங்கி சென்ற பார்த்த போது, குறித்த நபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago