Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கொழும்பு புளூமெண்டல் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலந்து கொண்ட தேர்தல் பிரசார பேரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பி வந்த சந்தேக நபர்கள் நால்வரும் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட வடமராட்சி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
தற்போது, மாதகல் கடல் பகுதியிலிருந்து வடராட்சி கிழக்கு பகுதி வரையான கடலோர மார்க்கங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தி சந்தேகத்துக்கிடமான வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் சிங்களவர்கள் மூவருடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரும் அடங்குகின்றார்.
செல்வராஜ் கணேசன் (வயது 30), ஆர்.எஸ்.எஸ். சுமர ஹெவத் ஆமி ரனபாத் (வயது 35) ஆர்.ஏ.எஸ்.சீ.செவட்ட சேவத் ஹேவத் புளுமென்ரல் (வயது 37) கே.என்.அன்சன பெற்றும் ஹேவத் உக்குன் ஆகியோரே சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை புளூமெண்டல் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தனது தேர்தல் காரியாலயத்தை திறந்து பிரச்சார பணி மேற்கொள்ள கொட்டாஞ்சேனை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்தனர்.
இதன் போது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இச்சம்பவம் தொடர்பில் விசாரiணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சந்தேக நபர்கள் விட்டு சென்ற தடயப்பொருட்களை மீட்டதுடன், அவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago