Niroshini / 2021 ஒக்டோபர் 28 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், எஸ். நிதர்ஷன்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 23 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை கிருஷந்தன், இன்று(28) உத்தரவிட்டதாக, கடற்டிறாழில் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர்கள், இந்த மாதம் 14ஆம் திகதி, பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இரண்டு விசைப்படகுகளுடன் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago