2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

30 இந்திய மீனவர்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல்

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 30 பேரையும் மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய புதுக்கோட்டை மற்றும் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 7 படகுகளில் வந்த 30 மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை (04) இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து பொலிஸாரிடமிருந்து மேற்படி மீனவர்களை பொறுப்பேற்றுக்கொண்ட கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) ஆஜர்ப்படுத்தியபோது, மீனவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (19) மீண்டும் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி மீனவர்களை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .