Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
யாழ். கோப்பாயிலுள்ள 51ஆவது படைத்தலைமையகத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக வெல்கமவுக்கும் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இச்சந்திப்பில் யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
குடாநாட்டில் இடம்பெற்று வரும் வழிப்பறி, கொள்ளை, கடத்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இரவு வேளைகளில்; பயணிக்கும் வாகனங்களை சோதனையிடுவதாகக் கூறிய கட்டளைத் தளபதி ஜனக வெல்கம, அண்மையில் சுபாஸ் விடுதி உட்பட பொதுமக்களின் இருப்பிடங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சில தமிழ் ஊடகங்கள் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
தமது படைப்பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளிலும் மீள்குடியேற்றப் பகுதிகளிலும் தங்கியுள்ள மக்களுக்கு படையினர் உதவியளித்து வருகின்றனர். ஆனால், அவை ஊடகங்களில் வெளிவருவது குறைவெனவும் கட்டளைத் தளபதி ஜனக வெல்கம தெரிவித்தார்.
யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, ஈ.பி.டி.பி.யின் வடமராட்சி அமைப்பாளர் ஜயாத்துரை சிறிரங்கேஸ்வரன் , ஈ.பி.டி.பி.யின் ஊர்காவற்றுறை அமைப்பாளர் காந்தன், ஈ.பி.டி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
.jpg)
31 minute ago
48 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
48 minute ago
52 minute ago
1 hours ago