2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

66 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவ தொண்டர் படை நியமனம் வழங்கல்

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்


இராணுவத்தினரின் தொண்டர் படையில் பணியாற்றுவதற்காக 66 தமிழ் இளைஞர்; யுவதிகளுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வியாழக்கிழமை (05) பலாலிப் படைத் தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மேற்படி நியமனக் கடிதங்களை சிவில் பாதுகாப்பு அதிகாரி அட்மிரல் அனந்த பீரிஸ் வழங்கி வைத்தார்.
இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் 18 பெண்களும் அடங்குகின்றனர்.இவர்கள் இவர்கள், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகளில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படவுள்ளனர்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா, தொண்டர் படையணியில் இணைவோரின் பெற்றோர்கள், படையதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .