2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பணிப்பெண் மீது வல்லுறவு: பொலிவூட் நடிருக்கு 7 வருட சிறை

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவூட் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஷினேய் அஹுஜாவுக்கு பாலியல் வல்லுறவு வழக்கில் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

38 வயதான நடிகர் அஹுஜா தனது வீட்டியல் பணியாற்றிய 20 வயதான யுவதியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.

தான் அந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கவில்லை என அஹுஜா வாதாடினார்.

எனினும் மரபணு பரிசோதனை உட்பட பல தடயங்கள் அவருக்கு எதிராக இருந்தன. இதனால் இவ் வழக்கில் அஹுஜ குற்றவாளியாக காணப்பட்டார்.

இன்று புதன்கிழமை மும்பை நீதிமன்றமொன்றின் நீதிபதி பி.எம். சௌஹான், அஹுஜாவுக்கு 7 வருட கடுங்காவல் தண்டைனை விதித்து தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தில் இன்று தனது மனைவி அனுபம் சகிதம் அஹுஜா ஆஜராகியிருந்தார். தீர்ப்பு வெளியிடப்பட்டபோது அஹுஜா கண்ணீர் சிந்தியதாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணை கமெரா மூலம் நடைபெற்றதால் தாம் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என நடிகர் அஹுஜாவின் சட்டத்தரணி தெரிவித்தார்.
 


  Comments - 0

  • xlntgson Friday, 01 April 2011 09:04 PM

    கிளிண்டன் சேவகி மோனிக்கா லெவின்ஸ்கி மாதிரி, சில காலம் சென்று, அவர் நினைவாகவே வாழ்கின்றேன் என்று அறிக்கை விட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .