ரஸீன் ரஸ்மின் / 2017 மே 29 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், பாலாவி சீமெந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில், யூ.எம்.ஹேமஸ்ரீ (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், அறுவக்காடு பிரதேசத்திலிருந்து புகையிரதம் ஊடாக பாலாவி சீமெந்துத் தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக் கற்கள் எடுத்துவரப்படுகின்றன. குறித்த சுண்ணாம்புக் கற்களை, புகையிரதப் பெட்டியிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குடும்பஸ்தரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று, இரவுநேரக் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த ஊழியர், அன்றிரவு அறுவக்காடு பகுதியிலிருந்து புகையிரத்தில் வந்துள்ள சுண்ணாம்புக் கற்களை புகையிரத பெட்டியிலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது எதிர்பாராத வண்ணம் பின்னால் நகர்ந்துவந்த புகையிரதப் பெட்டியொன்று, குறித்த ஊழியர் மீது ஏறியுள்ளதாகவும் இதனால், அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர், உடல் நசுங்கிய நிலையில், புகையிரதப் பெட்டியின் கீழ் கிடப்பதாக, சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் கடமைக்கு வருகைதந்த மற்றுமொரு ஊழியர், தமது மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, சம்ப இடத்துக்கு வருகை தந்த அதிகாரிகள், சம்பவம் பற்றி புத்தளம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். குறித்த ஊழியர், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பஸ்தரின் சடலத்தை, பிரேத பரிசோதனையின் பின்னர் அவருடைய மனைவியிடம் ஒப்படைக்குமாறும், விபத்துச் சம்பவம் தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை, எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று, புத்தளம் மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம்.எம்.இக்பால், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
54 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
26 Oct 2025