ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 12 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக வயம்ப அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் முஸ்லிம் சமய விவகாரம் ஆகிய அமைச்சுக்களில் இருந்து நிதியொதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, இன்று (12) தெரிவித்தார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புத்தளம் தேர்தல் தொகுதியில் உள்ள பள்ளிவாசல்களை புனரமைப்புச் செய்வதற்காக நிதியொதுக்கீடு செய்து தருமாறு, முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீமிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
“குறித்த வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சர் ஹலீம், முதற் கட்டமாக10 பள்ளிவாசல்களை அபிவிருத்தி செயவதற்கு 10 இலட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார்.
“இதன்படி, புத்தளம், வண்ணாத்தவில்லு, கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்ட பள்ளிவாசல்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
“அத்துடன், புத்தளம், வண்ணாத்தவில்லு, கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் வீதிகளை புனரமைப்புச் செய்வதற்கு நிதியொதுக்கீடு செய்யுமாறும் அமைச்சர் எஸ்.பி.நாவின்னவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். குறித்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நாவின்ன, அவற்றுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.
“இதேவேளை, கடந்த பொது தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் படி முந்தல், கற்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வகுப்பறைக் கட்டடங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
30 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago