Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
குருநாகல் மாவட்டத்தில், சமய சமூக சக வாழ்வையும் இன நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் பௌத்த சமயத் தலைவர்கள், தம்முடன் இணைந்து ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனரென, வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே.எம். முஸம்மில் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பான ஆலோசகராக கடமையாற்றிய அப்துல் காதர் மசூர் மௌலா ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு, ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (24) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வருகைக்குப் பின்னர், முஸ்லிம்களுடைய பாதுகாப்பு விடயத்தில் உறுதியான நம்பகத் தன்மை காணப்படுகிறது. அதேவேளை, அக்கட்சியைச் சார்ந்த பௌத்த சமயத்தின் பிரதான தலைவர்கள், சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் தவறான மனப் பதிவுகளைக் களைவதற்கான முயற்சிகளில், எம்மோடு இணைந்து செயற்படுகின்றனர். இதுவே, அமைதியான சூழலுக்கான அடித்தளமாகும் என்றார்.
எனவே, ஆளும் அரசாங்கத்தை பலப்படுத்த உரிய பங்களிப்புகளை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்பதே, தனது எதிர்பார்ப்பாகுமென, ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago