Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் மாவட்டத்தின் நிக்கவரெட்டிய பகுதியில், இ.போ.ச அலுவலக வளாகத்தில், கனரக வாகனங்களுக்கான மீள்பதிவு மற்றும் உறுதிபடுத்தல் தொடர்பான ஒருநாள் சேவை , நேற்று முன்தினம்(03) நடைபெற்றபோது, அங்கு சென்றிருந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை, அங்கிருந்த அரச ஊழியர் தகாத வார்த்தைகளைக் கூறி, இழிவாக நடத்தியுள்ளமை குறித்து பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் சேவை நடைபெற்றபோது அங்குச் சென்றிருந்த, நிக்கவரெட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர், பதிவுச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக கடவைக்குள் கொண்டுசெல்ல முயன்றபோது, அங்கிருந்த அதிகாரி, எவ்வித முன் ஒழுங்குப்படுத்தல்களும் இல்லாத நிலையில் இருந்த வேளையில், குறித்த இடத்தில் பணிபுரிந்த அரச ஊழியர் அங்கு வந்த பொது மகனை முறையற்ற விதத்தில் நடத்தியதோடு, தகாத வார்த்தைகளால் பேசி, சிறுபான்மை சமூகத்தை இழிவாகப் பேசியுள்ளார்.
அரச ஊழியர் ஒருவர் இவ்வாறு பாரபட்சமான முறையில் நடந்து கொண்டமையானது, பொதுமக்கள் மத்தியில் அரச ஊழியர்கள் மீது நன்மதிப்பு அற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இவ்வாறானச் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் இன ரீதியான முறுகல் ஏற்பட வாய்ப்பேடுகிறதென, பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பாக குறித்த வேவைகளுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
51 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago