Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்தறியும் விசேட அமர்வு, புத்தளம் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (16) காலை 9.30 மணி முதல் இடம்பெற்றது.
நாட்டின் அரசியல் யாப்பு மாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்காக பொது மக்களிடமிருந்து வாய் மூல மற்றும் எழுத்து மூலமான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக் கணிப்புக் குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, அதன் பிரகாரமே புத்தளம் மாவட்டத்துக்கான மக்கள் கருத்தறியும் நிகழ்வு, இன்று இடம்பெற்றது.
இதேவேளை, இந்நிகழ்வு நாளை வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளதுடன், காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை இக்குழுவினரிடத்தில் வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை constitutionalreforms@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், 011 2328780 என்ற தொலைநகல் மூலமாகவும் உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கிகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவுக்குத் தெரிவிக்க முடியும்.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை www.yourconstitution.lk என்ற இணையத்தளத்திலும் 011 2437676 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்புகொண்டும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago