Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரை வைத்தியசாலை வளாகத்துக்குள் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்குவதற்கு முற்பட்டதாக கூறப்படும் வைத்தியசாலையின் ஆய்வுக்கூட ஊழியருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலை ஊழியர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை (01) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஆய்வுக்கூட தொழிநுட்பவியலாளர்களுக்கு கடந்த 26ஆம் திகதி வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி பட்டறையில் ஆய்வுக்கூட ஊழியர்கள் இருவரைத் தவிர ஏனைய அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன் அந்த பயிற்சிப் பட்டறை நிறைவடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக குறித்த இருவரும் அங்கு வந்து அதில் கலந்து கொண்டுள்ளனர்.
அது தொடர்பில் டொக்டர் சுமித் அத்தநாயக்க, விசாரித்த போது, இரண்டு ஊழியர்களில் ஒருவர் தகாத வார்த்தைகளால் ஏசியுள்ளதுடன் தன்னை தாக்க முற்பட்டதாக் புத்தளம் பொலிஸாரிடம் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனையடுத்து, 26ஆம் தினதி இரவு, சந்தேகநபரான ஆய்வுக்கூட ஊழியர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் வைத்தியசாலை பணிப்பாளருக்கு அசாதாரணமாக நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இம்மாதிரியான சம்பவங்கள் இனி இந்த வைத்தியசாலையில் ஏற்படாத வகையில் நாட்டில் காணப்படும் நீதி முறைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியசாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்பாட்டத்தையடுத்து, வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து பேசிய பணிப்பாளர், தனக்கு எந்தவொரு ஊழியருடனும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை என்றும் வைத்தியசாலை சட்டமுறைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதேவேளை, ஆய்வுகூட ஊழியருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி வடமேல் மாகாண ஆய்வுக்குகூட ஊழியர்கள் 1ஆம் திகதி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
59 minute ago
1 hours ago