Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விருதோடை மற்றும் நல்லாந்தழுவை பிரதேசங்களில் அமைந்துள்ள ஆறு வீடுகளினுள், இன்று அதிகாலை நுழைந்துள்ள கொள்ளையர்கள், அங்கிருந்து தங்கச் சங்கிலி மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வீடுகளின் ஜன்னல் கதவுகளை கழற்றிக் கொண்டு உள்நுழைந்தே இத்திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விருதோடை பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டினுள் நுழைந்து அங்கிருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அவ்வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீட்டிலிருந்து சிறு தொகை பணமும், மற்றொரு கடையிலிருந்தும் சிறு தொகை பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நல்லாந்தழுவை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றினுள் நுழைந்துள்ள கொள்ளையன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளப் பெண்ணின் கழுத்திலிருந்து சுமார் ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்ளை இடம்பெற்ற வீடுகளுக்கு இன்று காலை புத்தளம் பொலிஸார் சென்று ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago