Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் குழுவான, 2000 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 2003 ஆம் ஆண்டு உயர் தரப் பிரிவின் மிலேனியம் சஹீரியன்ஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்துவ முகாம் நேற்று (25) புத்தளம் நாகூர் பள்ளி வீதி அமைந்துள்ள ஐ.எச்.எச். கட்டடத்தில் நடைபெற்றது.
டாக்டர் ஆமில் ஜவ்ஸி மற்றும் டாக்டர் ஜனார்த் ஆகியோர் இந்த இலவச வைத்திய சேவைதனை வழங்கினர்.
200 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் இந்த இலவச வைத்திய சேவையில் கலந்துகொண்டு, வைத்திய சேவைகளை பெற்றுக்கொண்டனர்.
நீரிழிவு நோய்க்கான இரத்தப் பரிசோதனைகள், குழந்தைகளுக்கான சேவைகள் மற்றும் கண் சம்பந்தப்பட்டநோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
36 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
21 Dec 2025