Princiya Dixci / 2015 நவம்பர் 23 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாராவில, மூதுகட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர், மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த உணவகத்தில் வைத்து இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவசர சத்திரசிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் யார் என்ற விடயமும் என்ன வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விடயமும் இதுவரை அறியப்படவில்லை எனத் தெரிவித்த மாராவில பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 minute ago
7 minute ago
9 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
9 minute ago
11 minute ago