Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில், தாதியொருவரால் இன்று (29) பெற்றுக்கொள்ளப்பட்ட காலை உணவில் கரப்பான் பூச்சி காணப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவித்த சக்கரைவள்ளிக் கிழங்குகளை உணவுக்காக பெற்றுக்கொண்டு, பொதியினை திறந்துபார்த்த வேளையில் கரப்பான் பூச்சி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் புத்தளம் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையில் சுகாதாரமற்ற உணவு வகைகள் விநியோகிக்கப்படுவதாக ஏற்கெனவே அதிகாரிகளால் எழுத்து மூலமான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago