2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

உயிர் தப்பிய யானைக்குட்டி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க 

நவகத்தேகம, அன்தரவௌ பகுதியில் நோய்வாய்ப்பட்டு உடல் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட யானைக்குட்டியை, மிருக வைத்தியரின் துணையுடன் பிரதேசவாசிகள் காப்பாற்றிய சம்பவம், நேற்று திங்கட்கிழமை (14) இடம்பெற்றுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யானைக்குட்டி, நீண்ட நாள் பசியின் காரணமாக இரசாயனம் கலந்த உணவை உட்கொண்டமையினால் உபாதைகளுக்கு உள்ளாகியிருந்ததுடன், காயங்கள் பல உடலில் காணப்பட்டிருந்ததாகவும் வட மேல், வட மத்திய மாகாணங்களுக்கான மிருக வைத்தியர் சந்தன ஜயசிங்க தெரிவித்தார்.

7 வயது நிரம்பிய குறித்த யானைக்குட்டி, பிரதேசவாசிகளின் உதவியுடன் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X