முஹம்மது முஸப்பிர் / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
செங்கல் வெட்டும் இடமொன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவரைத் தாக்கி கொலை செய்துவிட்டு, தலைமறைவாகியிருந்த வர்த்தகர் ஒருவரை, நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தகரை, மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவ, மோரக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய வர்த்தகர் ஒருவரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி, பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து, மெட்டிகொட்டுவ பிரதேச வீதியொன்றிலிருந்து, வெலிப்பண்ணகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய எம். எம். விஜேரத்ன என்பவரின் சடலத்தை, தங்கொட்டுவ பொலிஸார் மீட்டனர்.
அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வேளை குறித்த சந்தேகநபரான வர்த்தகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்காதல் தொடர்பை அடிப்படையாக வைத்தே, இக்கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திலிண ஹெட்டியாராச்சியின் உத்தரவின் பேரில், தங்கொட்டுவ பொலிஸ் குழுவினர், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago