Gavitha / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக, புத்தளம் தமிழர் பேரவையின் தலைவர் வீ. சண்முகவேல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டதையிட்டு, புத்தளம் தமிழர் பேரவை சார்பான வாழ்த்துக்கள் மற்றும் தமது தமிழர் பேரவையின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக, செவ்வாய்கிழமை (08) கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'வடமேல் மாகாணத்தின் இன நல்லுறவுக்கு பாலமாக, புத்தளம் நகரம் திகழ்கிறது. எதிர்காலத்தில் புத்தளம் நகரின் அரசியல் வெற்றிடத்தை தீர்மானிக்கும் சக்தியாக புத்தளம் தமிழர் பேரவை திகழவுள்ளது.
புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேசசபை போன்றவற்றில், தமிழ் உறுப்பினர்களை உறுதிப்படுத்தும் வகையில் எமது பணிகளை முன்னெடுத்துள்ளோம்.
புத்தளம் தொகுதியில் தமிழ் மக்கள் பரந்து வாழும் எழுவன்குளம், கரைத்தீவு, கரடிப்பூவல், இஸ்மாயில் புரம், கல்பிட்டி, ஏத்தாளை, நாவற்காடு, முந்தல், கருங்காலிச்சோலை மற்றும் உடப்பு போன்ற பிரதேசங்களில் வாழும் இந்து, கத்தோலிக்க தமிழ் மக்களை தொடர்பு கொண்டுள்ளதன் மூலம், எதிர்கால அரசியல் சக்தியை தீர்மானிக்கும் உரிமையை தமிழர் பேரவைக்கு அனைத்து இன மக்களும் வழங்கியுள்ளனர்' என்று அவர் தெரிவித்தார்.
அத்துடன், 'புத்தளம் மாவட்டத்தில் விகிதாசார முறையின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கடந்த 20 வருடங்களாக மறுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தோடு சுமூகமான உறவை பேணி, உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை நிரூபித்து, தட்டிப் பறிக்கப்பட்ட தொழில் வாய்ப்புகள், கல்வி மேம்பாடு, நில பங்கீடு, பொருளாதார வள பங்கீடு அனைத்தையும், தமிழ் மக்களுக்கு சமமாக பெற்றுக்கொள்ளும் உரிமையை இந்த நல்லாட்சியின் மூலம் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் உதவியோடு முன்கொண்டு செல்லவுள்ளோம்' என்றும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago