முஹம்மது முஸப்பிர் / 2018 ஜனவரி 25 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரலங்கட்டு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவரை முந்தல் பொலிஸார் நேற்று (24) இரவு கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் லொறியிலிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மரக்குற்றிகளுடன் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பரலங்கட்டு பிரதேசத்திலிருந்து அங்குணவில பிரதேசம் நோக்கிப் பயணித்த லொறி ஒன்றிலேயே இந்த மரக்குற்றிகளை கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மரக்குற்றிகள் பல இலட்சம் ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025