2025 மே 05, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம், பாலாவி பிரதேசத்தில், ஐந்து கிலோகிராம் கஞ்சாவை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேகநபரொருவரை, ஞாயிற்றுக்கிழமை (21) கைதுசெய்ததாக, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலக விசேட பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பு நடவடிக்கையின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி, தலவிலப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X