2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கடமைகளை பொறுப்பேற்பு

Kogilavani   / 2015 நவம்பர் 20 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகர சபையின் புதிய நிர்வாக அதிகாரியாக 30 வருட கால அரச சேவை அனுபவம் நிறைந்த எச்.எம்.எம்.சபீக், வெள்ளிகிழமை (20) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர், 1986ஆம் ஆண்டு பிராந்திய சுகாதார திணைக்களத்தில் இலிகிதராக இணைந்து 2007 வரை அங்கு பணியாற்றினார்.

2007 தொடக்கம் புத்தளம் தள வைத்தியசாலையின் செயலாளராகவும் பிரதம இலிகிதராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
2015 ஜனவரி மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற முகாமைத்துவ சிறப்பு பரீட்சையில் இவர் சித்தியடைந்ததன் மூலமாக புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரியாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஏறாவூரை பிறப்பிடமாகக்கொண்ட எச்.எம்.எம்.சபீக் புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாக கொண்டவர். புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் தலைவராக சில காலம் பதவி வகித்த இவர், தில்லையடி நியூ பிரண்ட்ஸ் அணியின் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X