2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கடமை தவறியமையினால் தபாற்காரனுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

கடமை தவறிய தபாற்காரனை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பாரதி விஜேயரத்த, நேற்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதானது, 

முந்தல், மதுரங்குளி தபால் நிலையத்தினால் விநியோகிக்கப்பட வேண்டிய 400 கடிதங்கள், ஸ்ரீ சரணங்கர விகாரையிலிருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டது.

இதனையடுத்து மதுரங்குளி தபால் நிலையத்தின் தபாற்காரனான ரஞ்ஜித் பிரேமலால் (வயது 58 ) என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுகவீனம் காரணமாகவே குறித்த கடிதங்களைத் தான் விநியோகிக்கவில்லை என அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

எனினும், கைது செய்யப்படுதவற்கு முதல் இருதினங்கள் வரை அவர் கடிதங்கள் விநியோகித்திருப்பதாகவும் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளமையினால் குறித்த கடிதங்களை விநியோகிக்கத் தவறியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபரை, செவ்வாய்;க்கிழமை (13) புத்தளம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X