2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கடற்படை வீரர் கைது

Editorial   / 2020 மார்ச் 30 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜீட் சமந்த

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கடற்படை வீரர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், கற்பிட்டி ஈச்சன்காடு கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர் ஒருவரஇன்று (30) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், சரணடைந்ததன் பின்னரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி முகத்துவாரம் பகுதியில், நேற்று (29) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கே.டீ.உஸ். விஜேவீர சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் காயமடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக,  புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .