Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 05 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின், ஜூட் சமந்த
கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலை , ஆதார வைத்திய சாலையாக (பி தரம்) தரமுயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு திங்கட்கிழமை (03) நடைபெற்றது. கற்பிட்டி பிரதேச சபையின் தலைவர் ஏ.எம்.இன்பாஸின் அழைப்பின்பேரில், வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மில், சுகாதார இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன ஆகியோர், குறித்த மாவட்ட வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர், வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முஹம்மட் பரீட் உட்பட அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், வைத்தியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண ஆளுநர் தலைமையிலான அதிதிகள், வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் பங்கேற்றனர்.
இதன்போது, கற்பிட்டி ஆதார வைத்தியசாலயில் காணப்படும் ஆளணி, பௌதீக வளப் பற்றாக் குறைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அதிதிகள், அத்தியாவசிய தேவைகளை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago