2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கல்பிட்டி பிரதேச சபையின் முதலாவது தலைவர் காலமானார்

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். ஹிஜாஸ் 

புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச சபையின் முதலாவது பிரதேச சபைத் தலைவர் எம்.எச். முஹம்மத் (உஹது) தனது 69ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (26) காலை காலமானார்.

காலஞ்சென்ற எம்.எச்.முஹம்மத், கடந்த சில மாதங்களாக சுகவீனமடைந்திருந்த நிலையில் மல்வானை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

1946ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி பிறந்த இவர், 1991-996 காலப்பகுதியில் கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராகவும் 1997-2002 காலப்பகுதியில் கல்பிட்டி பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டார். இறுதியாக நடைபெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X