2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காய்ச்சல் காரணமாக இளம் யுவதி மரணம்

Editorial   / 2017 ஜூன் 29 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்

காய்ச்சல் காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம், புழுதிவயல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஜியாத் பாத்திமா சாகிரா (வயது 17) எனும் இளம் யுவதியே, இவ்வாறு உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த யுவதி, காய்ச்சல் காரணமாக கடந்த 20ஆம் திகதி, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதி, இரண்டு நாட்களுக்களாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையிலே, செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரணமான யுவதி, தனது 13 வயதில் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாஸா, புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டதுடன், புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி பதுருதீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தினார்.

இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி பதுருதீன் முஹம்மது ஹிஸாம், உயிரிழந்த யுவதியின் மரணம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கியதுடன், யுவதியின் ஜனாஸா, பிரேத பரிசோதனையின் பின்னர் புதன்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த யுவதியின் உடலில் உள்ள அவயவங்களை இரசாயன பகுப்பாய்வுக்குப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னரே மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுருதீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X