Editorial / 2020 மார்ச் 18 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், காலி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் குழு இன்று (18) வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தலைமையிலான குழுவினரே, வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியும் காலி மாவட்டத்தில் வேட்பு மனுவை இன்று (18) தாக்கல் செய்துள்ளது.
தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நலின் ஹேவகே தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கமைய, தேசிய மக்கள் சக்தியில் 12 பேர் போட்டியிடவுள்ளனர்.
அத்துடன், லிபரல் கட்சியும், காலி மாவட்டதில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை இன்று (18) தாக்கல் செய்துள்ளது.
இதற்கமைய, லிபரல் கட்சி சார்பிலும் 12 பேர் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago