Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு உட்பட பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் சந்தேகநபரை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
படல்கம மேனக என அழைக்கப்படும் மேற்படி சந்தேகநபரை, நீர்கொழும்பு பிராந்திய சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பிரிவு பொலிஸார் , கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீர்கொழும்பு, கொட்டதெனியாவ, பன்னல, கிராந்துருகோட்டே, திவுலபிட்டிய ஆகிய பிரதேசங்களிலேயே, மேற்படி சந்தேகநபர், குற்றச் செயல்களைப் புரிந்துள்ளார்.
வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளைப் பறித்தல், மோட்டார் சைக்கிள் திருட்டு, கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து திருடுதல் போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேற்படி நபருக்கு எதிராக, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago