2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவங்கள்: ஏழுவர் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலேகம, கிரிமெட்டியான உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்ற வீடுடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், வாகனங்களைக் கூலிக்குப் பெற்றுக்கொண்டு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட கார், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றோடு கொள்ளையிடப்பட்ட பொருட்கள், வீடுகளை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆடைகள் மற்றும் பல உபகரணங்களையும், இவர்களிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்களின் தலைவன், கடுமையான வகையில் போதைக்கு அடிமையாகியுள்ளவன் என்றும், கும்பலின் ஏனையவர்களும் கெசினோ உள்ளிட்ட வேறு சூதாட்டம் மற்றும் மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எனத் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, தினக, புஜ்ஜம்பல, திஹாரி மற்றும் சிரிகம்பல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்ககே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், இவர்கள் நாட்டின் பல பிரதேசங்களிலும் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொஸ்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஓசித்த லங்கா த சில்வா தலைமையிலான குழுவினரே, இந்நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X