Princiya Dixci / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
இலங்கையில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரிக்கு 2016ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை, கல்லூரியின் மர்ஹூம் மஹ்மூத் ஹசரத் மண்டபத்தில் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஹிப்ழு பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2016ஆம் வருடம் பாடசாலை கல்வியில் 6ஆம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக்கூடியோராயும், உடல் ஆரோக்கியம் உள்ளோராயும் இருத்தல் வேண்டும். இப்பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள், புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் பாடசாலை கல்வியைத் தொடர்வார்கள்.
ஷரிஆ (கிதாபு) பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2016ஆம் வருடம் பாடசாலை கல்வியில் 9ஆம் அல்லது 10ஆம் தரத்தில் கற்கக்கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராயும், உடல் ஆரோக்கியம் உள்ளோராயும் இருத்தல் வேண்டும்.
இப்பிரிவுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கணனி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றுவர் மேலதிக விபரங்களுக்கு 032 22 65 738 , 0710122600 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

7 minute ago
14 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
2 hours ago
05 Nov 2025