Princiya Dixci / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம் தம்பபண்ணி ஆப்தீன் கலவன் பாடசாலையில் அண்மையில் உடைந்து வீழ்ந்த ஓலையினாலான வகுப்பறை தொகுதிக்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டடம் உதயமாகவுள்ளது.
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த புதிய கட்டட அமைப்புக்காக ஆரம்ப கட்டமாக மூன்று இலட்சம் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளார்.
முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். பைரூஸ் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் இந்த நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாக பாடசாலை அதிபர் மபாஹிர் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் அமைந்திருந்த ஓலையினால் வேயப்பட்ட வகுப்பறை கொட்டில் அண்மையில் உடைந்து வீழ்ந்த நிலையில் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
14 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
2 hours ago
05 Nov 2025