Princiya Dixci / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
கொழும்பிலிருந்து குப்பைகளை புகையிரதத்தின் மூலம் புத்தளம் வண்ணாத்திவில்லு அருவாக்காடு பிரதேசத்துக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் புத்தளம் மக்கள் குரல் அமைப்பினர், வண்ணாத்திவில்லு சந்தையின் முன்னால் நேற்று சனிக்கிழமை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கொழும்பில் குவிந்துள்ள குப்பைகளை வண்ணாத்திவில்லு அருவாக்காடு பிரதேசத்தில் சுண்ணாக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது, இதற்கு எதிராக அப்பிரதேச மக்களின் கையொப்பங்களும் பெறப்பட்டன.
புத்தளம் மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் சமந்த கோரள ஆராச்சி தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததோடு பல்வேறு எதிர்ப்பு சுலோகங்களையும் அவர்கள் ஏந்தி நின்றனர்.



5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago