2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

சிலாபம் மற்றும் மாதம்பை உள்ளிட்ட பிரதேசங்களில் கேரள கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் குழுவைச் சேர்ந்த ஐவரை, சுமார் நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாகவும் அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவின் போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே 35 - 45 வயதுக்குட்பட்ட இந்த சந்தேகநபர்கள் ஐவரும், 01 கிலோ 862 கிராம் கேரள கஞ்சாவுடன், புதன்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக படகுகள் மூலம் கேரள கஞ்சாவை நீர்கொழும்புக்கு கொண்டு வந்து அங்கிருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சிலாபம் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அத்தபத்து, சிலாபம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த ஹேரத் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் சிலாபம் பிரிவின் போதை ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கீர்த்திபால தலைமையிலான குழுவினரே இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X