Princiya Dixci / 2016 ஜூன் 14 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட 114 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் ஐவர் உட்பட இலங்கை மீனவர் ஒருவரையும், இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கற்பிட்டி சுற்றுலா நீதிமன்ற நீதவான் டீ.சீ.ஹேசாந்த பெரேரா, நேற்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.
கற்பிட்டிக்கு வடக்கே அமைந்துள்ள முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடந்த மே மாதம் 04ஆம் திகதி, கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களில் 15 வயது சிறுவன் ஒருவரும் உள்ளடங்கியிருந்ததுடன், அவர்கள் பயணித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
ரோந்து நடவடிக்கையில் ஈருபட்டிருந்த கடற்படையினர், சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட மீனவப் படகை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது அப்படகில் பொதி செய்யப்பட்டு இருந்த 114 கிலோ 30 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாவை மீட்டிருந்தனர்.
கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட ஆறு மீனவர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் அவர்கள் பயணித்த படகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினர், கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026