2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குழந்தையுடன் கிணற்றில் குதிக்க முற்பட்ட தாய்க்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

தனது மூன்று வயதும் நான்கு மாதங்களும் கொண்ட மகளுடன் கிணற்றில் குதிக்க முற்பட்ட பெண்ணை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் குழந்தையை தந்தையிடம் ஒப்படைக்குமாறும் குளியாபிட்டி நீதவான் நீதிமன்ற நீதவான், நேற்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

திகல்ல எத்தலவ எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண், மகளுடன் கிணற்றில் குதிக்க முற்பட்ட வேளை, இப்பெண்ணை பிரதேசவாசிகள் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் மீட்டு, குளியாபிட்டி பொலிஸாரிடம் நேற்றுக் காலை ஒப்படைத்தனர்.  

கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையினால் மனவிரக்தியடைந்தே இவ்வாறு செய்ய முற்பட்டதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். 

இப்பெண்ணை, குளியாபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று  ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X