Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஒருதொகை மஞ்சள், ஏலக்காய் என்பனவற்றுடன் ஒருவர், கற்பிட்டி, ஆணவாசல பகுதியில் வைத்து நேற்று (08) கற்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 20 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 114 கிலோகிராம் மஞ்சள் கட்டை, 261 கிலோகிராம் ஏலக்காய் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விற்பனை செய்யும் நோக்கில், இந்தியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இயந்திரப்படகு மூலம் கொண்டுவரப்பட்டிருப்பதாக, கடற்படையினர் சந்தேகம் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள், ஏலக்காய், இயந்திரப்படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, கற்பிட்டி கடற்படையினர் தெரிவித்தனர்.
1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025