Princiya Dixci / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
சட்டவிரோதமான முறையில் தப்போவ பாதுகாப்பு பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு மணல் அகழ்ந்து அவற்றை அனுமதிப்பத்திரமின்றி லொறியொன்றில் ஏற்றிச் செல்ல முற்பட்டவரைக் கைது செய்துள்ளதோடு கெண்டர் ரக லொறியையும் கைப்பற்றியுள்ளதாக புத்தளம் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கடந்த சனிக்கிழமை (17) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட இந்நடவடிக்கையின் போதே குறித்த லொறி கைப்பற்றப்பட்டதோடு மணல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
புத்தளம் - கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கடந்த சில காலமாக இவ்வாறு தப்போவ பாதுகாப்பு பிரதேசத்தினுள் நுழைந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்தே இந்த முற்றுகையில் ஈடுபட்டதாகவும் புத்தளம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் குறித்த இடத்தை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்ட சமயம் அங்கு கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மணலுடன் கூடிய கெண்டர் வாகனத்துடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


21 minute ago
36 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
46 minute ago