Princiya Dixci / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமாரகட்டுவ, புகுல்ஹேன்கட்டு எலிவிட்டிய குளப்பிரதேசத்தில் இரகசியமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை, செவ்வாய்க்கிழமை (29) முற்றுகையிட்டதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 650 கசிப்புப் போத்தல்களும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த குளத்தில் புதைக்கப்பட்டிருந்த 06 இரும்பு பெரல்களினுள் சீனி மற்றும் அமோனியா என்பன நீரில் கலந்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவற்றைக்கொண்டே கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையின் போது 02 கேஸ் சிலின்டர்கள், 04 ப்ளாஸ்டிக் கேன்கள் மற்றும் செப்புக் கம்பிச் சுருள்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட கசிப்பு போத்தல்கள், பொலித்தீன் பைகளில் இடப்பட்டு, உரப்பைகளில் சுற்றப்பட்டு, வாகனத்தில் ஏற்றி கொழும்புக்கு கொண்டுசெல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இச்சுற்றிவளைப்பு நடவடிக்கை சற்றுத் தாமதித்திருப்பினும் இக்கசிப்புப் போத்தல்களைக் கைப்பற்றியிருக்க முடியாது போயிருக்கும் எனவும் தெரிவித்தனர்.
வெளியிடத்திலிருந்து வந்த சிலர், இப்பிரதேசத்தினைச் சேர்ந்த சிலரை இணைத்துக்கொண்டு இந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
5 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
9 hours ago