Princiya Dixci / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
வில்பத்து தேசிய வனாந்தரத்தின் எல்லையில் அமைந்துள்ள தப்போவ பாதுகாப்பு வலயத்தினுள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி லொறியொன்றில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர்கள் இருவரை, திங்கட்கிழமை (26) புத்தளம் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
புத்தளம் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டதுடன், மரக்குற்றிகள் ஏற்றப்பட்ட லொறியும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், தப்போவ தேவநுவர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் கடந்த சில காலங்களாக தப்போவ பாதுகாப்பு வலயத்தினுள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து மரங்களை வெட்டி அவற்றைத் துண்டுகளாக்கி சிறிய ரக ரக்டர்கள் மூலம் ஊருக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளும் அவற்றை ஏற்றியிருந்த லொறியும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் புத்தளம் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



18 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
1 hours ago