Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது காயமடைந்தவர்களை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது சத்திரசிகிச்சை மருத்துவர்கள் இருவர் அன்றைய தினம் விடுமுறையில் இருந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்றதன் பின்னர் காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற போது விசேட மருத்துவர்கள் இருவர் சேவையில் இல்லாதிருந்ததாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்திரசிகிச்சை மருத்துவர்களின் தேவை அத்தியாவசியமாக இருத்த வேளையில், அவர்கள் இருவரும் விடுமுறையில் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.பரீட் தெரிவித்துள்ளார்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025